‘மகாமுனி’ பட நடிகை மகிமா நம்பியாருக்கு சர்வதேச விருது

ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை மகிமா நம்பியார் வென்றுள்ளார். அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. … Continue reading ‘மகாமுனி’ பட நடிகை மகிமா நம்பியாருக்கு சர்வதேச விருது